பொது எதிர்காலமுடைய ஆசிய-பசிபிக் சமூகத்தை உருவாக்குவதுடன் ஆசிய-பசிகிப் ஒத்துழைப்பின் புதிய காலக்கட்டம் தொடக்கம்
2020-11-21 17:28:03

பொது எதிர்காலமுடைய ஆசிய-பசிபிக் சமூகத்தை உருவாக்குவதுடன் ஆசிய-பசிகிப் ஒத்துழைப்பின் புதிய காலக்கட்டம் தொடக்கம்

பொது எதிர்காலமுடைய ஆசிய-பசிபிக் சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற இலக்கு, 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை காணொளிக் காட்சி வழியாக நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் 27ஆவது தலைவர்கள் சந்திப்பில் எட்டப்பட்டது. எதிர்வரும் 20 ஆண்டுகளில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு திசைக்கு இது வழிகாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபெக் அமைப்பின் கீழுள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டின்படி புதிய ரக கரோனா தொற்று நோயின் பாதிப்பினால், இவ்வாண்டு ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல்முறையாக பூஜியத்துக்கு கீழே செல்லும்.  மேலும் திட்டப்படி,  ஆசிய-பசிபிக் பொருளாதா ஒத்துழைப்புக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழிகாட்டிய போகர் கோல்ஸ் எனும் இலக்கு இவ்வாண்டுடன் காலாவதியாகி விடும். எனவே, இந்த ஒத்துழைப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு புதிய வரைவுத் திட்டம் மிகவும் அவசியமானது.

பொது எதிர்காலமுடைய ஆசிய-பசிபிக் சமூகத்தை உருவாக்குவது என்பது,  ஆசிய-பசிகிப் பிராந்தியத்தின் புதிய விருப்பத்தை  நனவாக்குவதற்கு வழிக்காட்டுவதாக அமையும்.

ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பில், தடையில்லா வர்த்தகப் பகுதிக் கட்டுமானத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதுடன், ஆசிய-பசிபிக் தடையில்லா வர்த்த்கப் பகுதியின் முன்னேற்றப் போக்கில் பெரும் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏபெக் அமைப்பின் நடப்புச் சந்திப்பில் பசிபிக் கடந்த கூட்டுறவுக்கான விரிவான மற்றும் முற்போக்கான உடன்படிக்கையில் சேர்வதை சீனா கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்தார். ஆசிய-பசிபிக் பிராந்தியம் ஒன்றாக இணைந்து பயனளிக்கும் எந்த முறைமைக்கும் சீனா திறந்த நிலை மனப்பான்மையை காட்டுவதை இது மெய்பித்துள்ளது.

ஒன்றாகவே மலையேறி ஒன்றாகவே பள்ளத்தாக்கைக் கடப்போம். ஆசிய-பசிபிக் பெரிய குடும்பத்தின் குறிக்கோள், அனைத்தும் உறுப்பினர்களும் 2040ஆம் ஆண்டு விருப்பத்தை நோக்கிச் செல்வதை ஊக்குவிக்கும். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு என்பது  சிலருக்கு தோல்வி சிலருக்கு வெற்றி என்ற ஒரு அரசியல் விளையாட்டு அல்ல. மாறாக, இந்த ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் களமாகும்.