உளவு பார்க்கப்பட்ட ஐரோப்பா- அமெரிக்கா உறவு சீராக இருக்குமா?
2020-11-26 18:45:44

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஜோ பைடன் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசினார். அப்போது, அட்லாண்டிக் கடந்த உறவை பலப்படுத்தி மறுசீராக்க வேண்டும் என்று பைடன் வலியுறுத்தினார்.

ஐரோப்பாவுடனான உறவை மேம்படுத்தும் விதம் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முன்முயற்சி இது என்று கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஹனிமூன்  என்ற நிலைக்கு திரும்பும் என்று சில செய்தி ஊடகங்களில், கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மை அதைப் போன்றதா?  அண்மையில், டென்மார்க் நாட்டை அமெரிக்கா உளவுப் பார்த்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியதில் இருந்து இதற்கான பதில் கிடைக்கலாம்.

டென்மார்க் நாட்டின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, 2015 முதல் 2016 வரை புதிய ரக போர் விமானங்களை வாங்க டென்மார்க் திட்டமிட்ட போது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணைய நிறுவனம் அந்நாட்டின் நிதி  மற்றும் வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் மற்றும் ராணுவ தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது உளவு பார்த்தது. இறுதியில், அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் இதில் ஒப்பந்தத்தை வென்றது.

அது மட்டுமல்லால், டென்மார்க் தவிரவும், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வருகிறது. இது பற்றி பிரிட்டன் சர்வதேச உறவு ஆய்வாளர் தாம் ஃபாவ்டி சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், ஐரோப்பாவுக்கு உண்மையான அச்சுறுத்தல், வாஷிங்டன் என்று சுட்டிக்காட்டினார்.

கூடுதலாக,  அட்லாண்டிக் கடந்த கூட்டுறவு பற்றி விவாதங்களில், ஐரோப்பிய  கருத்துக்களில், அமெரிக்கா மீதான வருத்தம் மற்றும் விழிப்புணர்வு போன்ற எதிரொலிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மாறாக, அட்லாண்டிக் கடந்த கூட்டுறவு மீது பகுத்தறிவுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுளது.

அமெரிக்காவின் புதிய அரசுத் தலைவராலும் கூட, ஐரோப்பாவும் அமெரிக்காவும், முன்பு இருந்த ஒளிமிக்க காலத்திற்கு  திரும்புவதை நனவாக்க முடியாது என்று ஜெர்மனியின் ஸுட்டெட்ச்சே சிட்டுங்  எனும் இதழ் விமர்சித்துள்ளது.