விரிவாக்கப்பட்ட சீன வெளிநாட்டுத் திறப்பு
2020-12-01 20:04:08

சீனா மேலும் உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்புப் பணியில் ஊன்றி நின்று, சீன-ஆசியான் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை முன்னேற்றும் என்ற மனவுறுதியை நவம்பர் 30ஆம் நாள் நிறைவடைந்த 17ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி வெளிகாட்டியது.

இப்போது வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி ஆசியானின் 10 நாடுகளும் சீனாவுடன் உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன.

எதிர்காலத்தில், பொலிவுறு நகரம், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, மின் வர்த்தகம், பெருந்தரவு, தொகுப்பு சங்கிலி, இணையவழி மருத்துவ சேவை ஆகிய துறைகளில் சீன-ஆசியான் ஒத்துழைப்பை ஆழமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.