மோரிசன் துயரமான நகைச்சுவை
2020-12-02 18:41:01

மோரிசன் துயரமான நகைச்சுவை

ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் காரணங்கள் இன்றி ஆப்கானிஸ்தானில் பொது மக்களைக் கொன்ற தகவல் ஆஸ்திரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சமூக இணையத்தளத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் படம் ஒன்றை வெளியிட்டார். ஆனால், வன்முறை நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் மோரிசன் மன்னிப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக, சீனா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீண்டகாலமாக, மேலை நாடுகள், மனித உரிமை பாடம் எடுக்கும் ஆசிரியராக, இதர நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன. ஆனால், சொந்த தவறுக்கு எதுவும் தெரிவிப்பதில்லை.

உண்மையில், கடந்த 20 ஆண்டுகாலத்தில், மேலை நாடுகள், ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், உள்ளூர் பாதுகாப்பு நிலைமை மேம்படவில்லை. மேற்கூறிய வன்முறை செயல்கள் அதற்கு காரணமாகும்.