உண்மைகளை மறைத்த மேலை நாடுகள்
2020-12-03 18:32:32

உண்மைகளை மறைத்த மேலை நாடுகள்

வெளிநாட்டு ராணுவப் படைகள், ஆப்கானிஸ்தானில் காரணமின்றி பொது மக்களைக் கொன்ற குற்றத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பொது மக்களைக் கொன்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு இதர நாடுகள் ஆதரவு அளிப்பதையும் வரவேற்கின்றோம் என்று அண்மையில் ஆப்கானிஸ்தான் டைம்ஸ் என்ற செய்திதாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் காரணமின்றி ஆப்கானிஸ்தான் பொது மக்களைக் கொன்ற சம்பவத்தைப் பயன்படுத்தி, சீனாவுக்கும் மேலை நாடுகளுக்குமிடையிலான உறவு மோசமாக மாறுவதற்கான மாதிரியைக் கருதி, மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் தவறாக செய்தியைப் பரப்பின.

இந்த தவறான விளக்கத்தின் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராணுவ வீரர்களும். காரணமின்றி பொது மக்களைக் கொள்வதுண்டு !

மேலை நாடுகள் ஒரே விழுமியம் கொண்ட குழுவாக அவை கருதுகின்றன. இந்நிலையில் இந்த நாடுகள், சீனாவையும் அவற்றுக்கு பிடிக்காத இதர நாடுகளையும் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், சீனா, அவற்றின் மீது குற்றஞ்சாட்டுவது  ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அவை கருதுகின்றன.