அரசியல் மற்றும் சித்தாந்த எதிர்ப்பை கைவிட வேண்டும்
2020-12-03 19:20:56

கடந்த ஆண்டு டிசம்பர் திங்களிலே அமெரிக்காவில் கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளானவர் இருந்தனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்கள் நவம்பர் 30ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு முடிவு காட்டுகின்றது. தவிரவும், ஏ, பி, சி ஆகிய கரோனா வைரஸின் திரிபுகளில், ஏ திரிபு வைரஸ் அதிகமாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திலேரியாவில் காணப்படுகின்றன. சீனாவின் வூகான் நகரில் கண்டறிந்த பி திரிபு வைரஸ், ஏ திரிபிலிருந்து உருவமாறிந்த வகையாகும் என்று இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் அறிவியலாளர்கள் அடுத்தடுத்து கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கொவைட்-19 நோயால் முதன்முதலில் கடுமையாகத் தாக்கப்பட்ட சீனாவை மேலை நாடுகள் காரணமின்றி குற்றஞ்சாட்டி வருகின்றது. சித்தாந்த ரீதியில் தப்பு எண்ணம் மற்றும் குறிப்பிட்ட அரசியல் நோக்கம் ஆகியவை இதற்கான காரணமாகும் என்று சுட்டிக்காட்டத்தக்கது.

எடுத்துக்காட்டாக, கரோனா வைரஸ் பரவத் துவங்கிய காலத்தில், சீனா கண்டிப்பான முடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது மனித உரிமை மீறல் என்று மேலை நாடுகள் குற்றஞ்சாட்டின. நடைமுறையில் இத்தகைய முடக்க நடவடிக்கைகள் நோய் தடுப்புக்கான பயன் மிக்க நடவடிக்கையாகும் என்று நிரூபிக்கப்பட்டது.

மேலை நாடுகளின் தப்பு எண்ணம் மற்றும் நடவடிக்கைகள் இனப்பாகுபாட்டைத் தீவிரமாக்கும் அதேவேளையில், சீனாவுக்கும் அவற்றுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையையும் அதிகரித்துள்ளது.

தற்போது புதிய சுற்று நோய் பரவல் துவங்கியுள்ளது.  இதனைத் தடுக்க அரசியல் மற்றும் சித்தாந்த எதிர்ப்பை கைவிட்டுவிட வேண்டும்.