மோரிசனின் உண்மை நோக்கம் என்ன?
2020-12-04 18:39:43

சீனாவுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் சீனாவுடனான உறவு இரு தரப்புகளுக்கும் நன்மை பயக்கும் என்றும் ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் மோரிசன் வியாழக்கிழமை தெரிவித்தார். அரசியல் துறையில் அமெரிக்காவைப் பின்பற்றி சீனாவின் மீது அடக்கமுறை மேற்கொள்வதோடு, சீனாவிலிருந்து பொருளாதார நலன்களைப் பெற அவர் விரும்புகின்றார். ஆனால், இத்தகைய செயல் ஆஸ்திரேலியாவை குழப்பத்துக்கு வழிகாட்டியுள்ளது.

ஹாங்காங், சின்ஜியாங் முதலிய சீனாவின் இறையாண்மை பிரச்சினைகளில் ஆஸ்திரேலிய அரசு மீண்டும் மீண்டும் சீனாவைக் குற்றஞ்சாட்டியதற்கான காரணம், அமெரிக்காவிடம் தனது மதிப்பைக் காட்டுவதே என்று நியூயார்க் டைமஸ் அண்மையில் விமர்ச்சித்தது.

2019ஆம் ஆண்டு சீனாவுக்கான ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி அளவு, அந்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 38.2 விழுக்காடு வகிக்கின்றது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 95 விழுக்காடு குறைந்தால், ஆஸ்திரேலியாவின் ஜிடிபி 6 விழுக்காடு குறையும் என்று மதிப்பிடப்படுகிறது.

சீனாவிடமிருந்து நன்மை பெற்று வரும் ஆஸ்திரேலியா, சீனாவின் மீது  அவதூற பரப்ப நினைப்பது பகல் கனவாகவே போகும்.