சீனப் பொருளாதாரம் மீதான எதிர்பார்ப்பு உயர்வு
2020-12-05 19:30:56

பெரும் தொற்று நோயில் இருந்து விடுபட்டுள்ள சீனப் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க சிஎன்பிசி தொலைக்காட்சி சேனலின் உலகளவிய தலைமை நிதி அதிகாரிகள் மன்றம், சமீபத்தில் வெளியிட்ட 4ஆவது காலாண்டு ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள், சீனப் பொருளாதாரம் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதார கண்ணோட்டத்தை உயர்த்தி, முன்பு இருந்த மிதமான சரிவை தற்போது நிலைத்தன்மை காணப்படும் நிலைக்கு இம்மன்றம் மாற்றியுள்ளது.

கொவைட்-19 தொற்று, தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள மிக பெரிய வெளிப்புற அறைகூவல் ஆகும் என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்ற தலைமை நிதி அதிகாரிகளிடையே கிட்டத்தட்ட 65விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.