சீன வெளிநாட்டு வர்த்தகத் துறை மீட்சி
2020-12-07 20:51:12

இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை வலுவாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நவம்பர் திங்களில் அதன் வளர்ச்சி வேகம் மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் திங்களில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக தகை 46072கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இருந்ததை விட 13.6விழுக்காடு அதிகமாகும்.

வலுவான ஏற்றுமதி, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு, தீர்க்கமான ஆதரவு அளித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து மீட்சி அடைவது, தொழில்துறை விரைவாக மீட்கெடுப்பது, நுகர்வுச் சந்தை மறுமலர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவது முதலியவை காணப்பட்டுள்ளன. சீனப் பொருளாதார மீட்சி அடைந்துள்ள சமிக்கை தெளிவாகியுள்ளது. மீட்சி அடையும் வேகமும் விரைவாகியுள்ளது.

உலகச் சுகாதார அமைப்பு அக்டோபர் திங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் உலக முழுவதிலும் சரக்கு வர்த்தக அளவு 9.2விழுக்காடு குறையும்.

வெளியுலகில் உறுதியற்ற காரணிகள் இருந்தபோதிலும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை மீட்கெடுத்து, பொருளாதாரம் தொடர்ந்து சீரான திசைக்கு வளர்ச்சி அடையும் நிலை சந்தையில் எட்டப்பட்டுள்ள கருத்து ஒற்றுமை. புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்குவதை விரைவுபடுத்தும் சீனா, திறப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில், உலக வர்த்தகத்தை நிதானப்படுத்தி, உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்ற பங்காற்றி வருகின்றது.