தடுப்பூசி விநியோகம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி வரும் சீனா
2020-12-09 20:33:55

சீன மருந்து நிறுவனம் ஆய்ந்து தயாரித்து வரும் கரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் 9ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது என்று அந்நாட்டின் செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டது. இதற்கு முன்பு, சீனாவின் 12லட்சம் தடுப்பூசி மருந்துகள் முதல்முறையாக இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கடந்த நவம்பரில் ஜி-20 உச்சி மாநாட்டில் பேசுகையில்,  வளரும் நாடுகளுக்கு ஆதரவு மற்றும் உதவி வழங்கி, பல்வேறு நாட்டு மக்கள் வாங்க கூடிய விலையில், தடுப்பூசியைப் பொதுப் பொருளாக்கி விநியோகம் செய்ய பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

தற்போது,  சீனாவில் தடுப்பூசி ஆய்வு மற்றும் தயாரிப்புப் பணி தடையின்றி நடைபெற்று வருவதுடன், சீனா, இத்தகைய வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.

சீனாவில் இருந்து வந்துள்ள தடுப்பூசி, இந்தோனேசிய மக்களுக்கு நல்ல செய்தி என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ஜோகோ விடோடோ கூறினார். ஆனால், மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் சீனாவின் தடுப்பூசி மீது அவதூறுப் பரப்பி வருவது கண்டத்துக்குரியது. எடுத்துக்காட்டாக, சீனாவின் தடுப்பூசி இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன் ஃபைனன்ஷில் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரையில், அரசியல் நோக்கத்துடன் சீனாவின் தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் இடர் உண்டாகும் என்று அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளது.

ஆய்வாளர்கள் சொன்னதைப் போலவே, சீனாவின் தடுப்பூசி குறித்து சமீபத்தில் அடிக்கடி அவதூறு பரப்பப்படுகிறது. இத்தகைய கருத்துக்களைப் பரப்புவதன் பின்னணியில், மேலை நாடுகளின் தடுப்பூசிகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கச் செய்யும் நோக்கம் ஒளிந்துள்ளது.

சில நாடுகள் சீனாவின் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளது அந்த அவதூறு கருத்துக்களுக்கு மிக நல்ல பதிலடியாகும். பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைப்புகளை நெருக்கமாக்கி, முன்னுரிமையுடன் வளரும் நாடுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு,  தடுப்பூசிகளின் நியாயமான பங்கீடு என்ற நிலையை மேம்படுத்த, சீனா பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.