அமெரிக்க அரசியல்வாதிகளின் அரசியல் ஆக்கிரமிப்புக்குச் சீனா கடும் எதிர்ப்பு
2020-12-09 11:06:38

2019ஆம் ஆண்டின் ஜூன் திங்கள் முதற்கொண்டு வெளிநாட்டுச் சக்திகளின் திட்டம் மற்றும் ஊக்கத்துடன், ஹாங்காங் சமூகம் குழப்ப நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி, சொந்த நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச வழக்க விதியின்படி ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வகுத்து, சட்டப்படி ஹாங்காங்கில் ஆட்சியை முன்னேற்றி, குற்றவாளிகளுக்குரிய தண்டனைகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 8ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மீது காரணமின்றி குற்றஞ்சாட்டி, சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர்களின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.  ஆனால், அமெரிக்காவின் இத்தகைய செயல்களால், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையையும், ஹாங்காங் சமூகத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சியைத் தேடும் மக்களின் விருப்பத்தையும் மாற்ற முடியாது என்பதோடு, சீன தேசத்தின் மறுமலர்ச்சி முன்னேற்றப் போக்கையும் தடுக்க முடியாது.