அமெரிக்காவில் பெரும் பிரிவினை ஏற்பட காரணம் என்ன?
2020-12-11 20:40:49

அமெரிக்காவில் டிரம்பின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின், அமெரிக்கா இடர்பாட்டில் சிக்கும். முன்கண்டிராத அளவிற்கு  மிக பெரும் பிரிவினை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது என்று பிரான்ஸின் லேபிகரோ செய்திதாள் இவ்வாண்டின் ஜுன் திங்களில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசுத் தலைவரின் கொள்கைகளால், அமெரிக்கா பிரிவினையில் சிக்கியுள்ளது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 6 திங்களுக்குப் பிறகு, அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் காணப்பட்ட நிறைய குழப்பங்கள் இந்த கருத்தை மெய்பித்துள்ளன. இதற்கு காரணம்  என்ன?

அமெரிக்காவில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்து பெருகி வருகின்றது. அமெரிக்கக் கொள்கை ஆய்வு நிறுவனம் நவம்பர் திங்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், அந்நாட்டில் இவ்வாண்டின் மார்ச் திங்கள் கரோனா தொற்று பரவித் தொடங்கியது முதல் நவம்பர் திங்கள் வரை, 650 பணக்காரர்களின் செல்வம், 1 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து,  மொத்தமாக, 4 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. மறுபுறம், தொற்றுநோயை எதிர்ப்பதில் அரசின் திறமையற்ற நடவடிக்கைகளால், சாதாரண குடும்பங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. கோடிக்கணக்கான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இந்த தரவுகளைப் பார்த்தபோது, அமெரிக்க சமூகத்தில் கோபங்கள் மற்றும் பிரிவினைவாதம் தலைத்தூக்கியது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் சூழலில் அடிப்படை ரீதியிலான மாற்றம் இல்லாமல், அந்நாட்டில் ஆழ்ந்த முராண்பாடுக்கு தீர்வு காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.