காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பயணத்தை முன்னேற்றும் சீனா
2020-12-13 17:46:43

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாளிரவு காலநிலை பேராவல் உச்சிமாநாட்டில் காணொளி மூலம் முக்கிய உரை நிகழ்த்தினார். எதிர்காலத்தில் உலக காலநிலை மாற்றச் சமாளிப்புக்கான 3 முன்மொழிவுகளை முன்வைத்ததுடன், 2030ஆம் ஆண்டு வரை, கரியமில வாயு வெளியேற்றம் குறைவு உள்ளிட்ட பல புதிய நடவடிக்கைகளையும் அறிவித்தார். இது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான புதிய சீன ஆற்றலாகக் கருதப்படுகிறது.

ஒருமனதுடன் ஒன்றுபட்டு, காலநிலை மேலாண்மைக்கு ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறக் கூடிய புதிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பேராவலை உயர்த்தி, புதிய காலநிலை மேலாண்மை முறைமையை அமைக்க வேண்டும். நம்பிக்கையை வலுப்படுத்தி, பசுமையான மீட்சியில் புதிய காலநிலை மேலாண்மை சிந்தனையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற 3 முந்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

குறிப்பாக, பல தரப்புவாதத்திலும் வேறுப்பாட்டுடன் கூடிய பொது கொள்கையிலும் ஊன்றி நின்று, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான முன்மொழிவு முக்கியத்துவம் வாய்ந்தது.

தவிர, காலநிலை மாற்றச் சமாளிப்பில் சீனா திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 2030ஆம் ஆண்டில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான கரியமில வாயு வெளியேற்றம் 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 65 விழுக்காட்டுக்கு மேல் குறைக்கப்படும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது. சீனா சரியான திசையில் பயணித்து வருகிறது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் தெரிவித்துள்ளார்.