வரலாறு மீதாவு ட்விட்டரின் இரட்டை வரையறை
2020-12-14 21:13:33

நான்ஜிங் படுகொலையில் உரியிழந்தோருக்கான 7ஆவது தேசிய அஞ்சலி தினம் டிசம்பர் 13ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. 83 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சக நாட்டவர்களுக்கு அனைத்து சீனர்களும் அஞ்சலி செலுத்தினர். ஆனால், உலகில் புகழ்பெற்ற சமூக ஊடகமான ட்விட்டரில், நான்ஜிங் படுகொலை பற்றிய வரலாற்றுப் படங்கள் மற்றும் காணொளிகள் அழிக்கப்பட்டன. ஜப்பானிய வலதுசாரிகள் வரலாற்றைத் திரித்துப்புரட்டி கூறிய கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.

தூரக் கிழக்கு சர்வதேச இராணுவ நீதி மன்றம் அதிகாரப்பூர்வமாக நான்ஜிங் படுகொலை குற்றச்செயல் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டர் இரட்டை வரையறை மேற்கொண்டுள்ளது. இது, அடிப்படை மனித மனசாட்சியை இழந்து செய்யப்படும் செயல் போன்றதாகும்.

சில மேலை நாட்டு ஊடகங்கள் முன்வைத்த "பேச்சு சுதந்திரம்" என்ற பச்சைப்பொய்யை மக்கள் மீண்டும் பார்க்கின்றனர். அவற்றின் சிதைந்த மதிப்புகள் மற்றும் அரசியல் குண்டர்களின் நோக்கம் மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ட்விட்டர் போன்ற அமெரிக்க சமூக ஊடகத்தின் நிலைப்பாடு, அதற்கு நிதியுதவி வழங்கும் குழுக்கள், அரசியல் சக்திகள் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலன்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், அமெரிக்க தேசிய நலன்களுக்குச் சேவை செய்யும் ஒரு அரசியல் கருவியாகும்.

ஆக்கிரமிப்புப் போரின் வரலாற்றை பொருட்படுத்தாத அனைத்து கருத்துக்களும் மனித அமைதி மற்றும் நீதியை சீர்குலைப்பது போன்றதாகும். இதற்கு உலக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.