ஆஸ்திரேலிய மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் ஸ்காட் மோரிஸன்
2020-12-15 20:40:42

காலநிலை வெப்பமயமாதல் காரணத்தால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மிக மோசமான வானிலை அடிக்கடி நிலவி வருகின்றது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் முதல் 4 திங்கள் காலம் ஆஸ்திரேலிய காட்டு தீ விபத்து நீடித்தது. ஆனால், அது குறித்து, ஆஸ்திரேலிய தலைவர்கள் கவனம் செலுத்துவதில்லை. சமீபத்தில் நடைபெற்ற காலநிலை பேராவல் உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்த ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஸ்காட் மோரிஸனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு திட்டத்தை உருவாக்கவும், வளரும் நாடுகளுக்கு நிதி ஆதரவு வழங்கவும் திடமிட்டுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்படும் என்று தி கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை ஆஸ்திரேலியா எப்போதுமே கொண்டுள்ளது. அமெரிக்காவைத் தவிர, கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த ஒரே ஒரு தொழில்மயமான நாடாக ஆஸ்திரேலியா இருந்திருந்தது. உலக மக்கள் தொகையில் 0.3 விழுக்காடு வகிக்கும் ஆஸ்திரேலியாவின் கரியமில வாயு வெளியேற்ற அளவு 1.3 விழுக்காட்டை எட்டியது. நபர்வாரி வெப்ப அறை வாயு வெளியேற்றத்தை அதிகமாகக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்றாகும் என்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் எரியாற்றல் கல்லூரி ஆலோசகர் சின் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பது என்பது மனிதகுலத்தின் பொதுவான பொறுப்பாகும். ஆனால், மோரிஸன் ஆஸ்திரேலிய மக்களின் நலன்களை பொருள்படுத்தாமல் செயல்பட்டு வருகின்றார். தமக்குச் சாதகமான குழுக்களுக்கு செய்தித் தொடர்பாளராக சேவை வழங்குவது தான் அவரது உண்மையான தோற்றம்.