சீனாவை எதிர்க்கும் விதம் மேலை நாட்டு ஊடகங்களின் ஏமாற்று நடவடிக்கைகள்
2020-12-16 18:39:26

சீனாவை எதிர்க்கும் விதம் மேலை நாட்டு ஊடகங்களின் ஏமாற்று நடவடிக்கைகள்

அண்மையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறுகையில், ஆவணம் ஒன்றுக்கிணங்க, 19 லட்சத்து 50 ஆயிரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சீனாவிலுள்ள பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் நிறுவனங்களில் ஒற்றர்களாகப் பணி புரிகின்றனர். அமெரிக்க இதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தன. ஆனால், இதற்கான சான்றுகள் கண்டறியப்படவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சீனா மீதான பன்னாட்டு நாடாளுமன்ற கூட்டணியிலிருந்து இந்த ஆவணம் கிடைத்தது. 8 நாடுகளைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் அடங்கிய இந்த அமைப்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர் மார்கோ அன்டோனியோ ரூபியோவால் இவ்வாண்டு ஜுன் திங்கள் உருவாக்கப்பட்டது. ஹாங்காங், சின்ஜியாங், திபெத் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் சீனாவின் மீது பழி கூறி வருகின்றனர்.

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதன் காரணமாக, அண்மையில் ரூபியோவின் மீது சீனா தடை நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், அவர்கள் இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி, சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சோஷலிச நாடாக சீனா திகழ்கிறது. இது சீனாவை அறிந்து கொண்ட அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 கோடியே 20 லட்சமாகும். அவர்கள் பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகப் பணி புரிந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களை நியமிப்பது இயல்பான நிலைமையாகும். இந்த ஆவணம் பற்றிய தகவல், சீனாவை எதிர்ப்பதற்கான ஒரு ஏமாற்று உத்தி என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.