சின்ஜியாங்கை இழிவுபடுத்த பொய் பிரசாரம்
2020-12-18 20:49:16

சின்ஜியாங்கிலுள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான உய்கூர் மக்கள் பருத்தி எடுக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற பொய் கூற்கை அமெரிக்க சிந்தனைக் கிடங்கான உலக கொள்கைக்கான மையம் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சில சீன எதிர்ப்பு சக்திகள், சின்ஜியாங் உய்கூர் மக்களுக்கு சீரான வேலை வாய்ப்பை நனவாக்கும் விவகாரத்தை கட்டாய உழைப்பாக கூறுவதன் மூலம், சீனாவின் புகழுக்கு ஊறு விளைவித்து, சீன இன உறவை சீர்குலைத்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று வருகின்றனர்.

கெட்ட எண்ணத்துடன் கொல்படும் சிந்தனைக் கிடங்குகள் மற்றும் நிபுணர்கள் அறிக்கைகளை இயற்றுவது, மேலை செய்தி ஊடகங்கள் வதந்திகளைப் பரப்புவது, அரசியல்வாதிகள் சீனா மீது தடை நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு, பதில் அளிக்கும் விதம் சீனா, சின்ஜியாங் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் என்ற வெள்ளையறிக்கையையும், சின்ஜியாங் சிறுபான்மை தேசிய இன வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டுயுள்ளது. சின்ஜியாங் வேலைவாய்ப்பு கொள்கை தொழிலாளர்களின் வேலை விருப்பத்தை முழுமையாக மதித்து, சட்டத்தின் படி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, சின்ஜியாங் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கைகளில் தெளிவுபடுத்தப்பட்டது.

சீன அரசு செயல்படுத்தி வரும் சின்ஜியாங் கொள்கைகள் மற்றும் மனித உரிமை வளர்ச்சியை உலகின் பெரும்பாலான நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன. சின்ஜியாங் விவகாரத்தைப் பயன்படுத்தி, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் எந்த நடவடிக்கைகளும் தோல்வியையே அடையும்.