உலக விண்வெளி பயணத்தில் சீனாவின் பங்கு
2020-12-18 10:54:42

டிசம்பர் 17ஆம் நாள் அதிகாலை, நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து கொண்டு சீனாவின் சாங்-ஏ 5ஆவது விண்கலம் பூமிக்குத் திரும்பியது. அதனையடுத்து மனித வரலாற்றில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர மண்ணை மீண்டும் பூமிக்கு எடுத்து வந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதனிடையில், கனவைப் பின்பற்றுவது, தீரத்துடன் ஆய்வு செய்வது, கூட்டாக சிக்கல்களைச் சமாளிப்பது, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகிய சந்திர ஆய்வு குறிக்கோளைப் பின்பற்றி, விண்வெளி ஆய்வுக்கான புதிய கட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அன்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் சர்வதேச ஒத்துழைப்பு, சாங்-ஏ 5ஆவது திட்டப்பணிக்கு உதவி அளித்துள்ளது. அதிகாரப்பூர்வத் தகவலின் படி, சீனத் தேசிய விண்வெளிப் நிறுவனம், 44 அன்னிய விண்வெளி நிறுவனங்கள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் 140 விண்வெளி ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு, சந்திர மற்றும் செவ்வாய்க் கிரக ஆய்வு தொடர்பாக ஒத்துழைப்பு மோற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமத்துவம், அமைதியாக வளர்வது, கூட்டாக வெற்றி பெறுவது ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி, பொது இலக்கு கொள்ளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அறிவியலாளர்களுடன் சந்திர மண்ணைப் பகிரந்து கொள்ளவுள்ளதாகவும்  சீனா வாக்குறுதியளித்துள்ளது.