சீன பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டம்
2020-12-19 15:47:22

டிசம்பர் 16 முதல் 18ஆம் நாள் வரை, சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் 2020ஆம் ஆண்டின் பொருளாதார பணியைத் தொகுத்து, தற்போதைய பொருளாதார நிலைமையை ஆய்வு செய்து, 2021ஆம் ஆண்டின் பொருளாதார பணிக்கான திட்டம் பரவல் செய்யப்பட்டது.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலிலும் வெளிப்புற சூழலிலும் உறுதியற்ற அம்சங்கள் இருந்தன. சீன பொருளாதார மீட்சியின் அடிப்படை நிதானமற்றது. அடுத்த ஆண்டில் உலக பொருளாதார மீட்சியின் எதிர்ப்பார்ப்பு குறைவு. இதனால், சீன பொருளாதாரம் நிதானமாக மீட்சியடைந்து, வெற்றி பெறும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சீன பொருளாதாரம் தொடச்சியாகவும், உறுதியாகவும், தொடரவல்ல முறையிலும் மீட்சியடைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் இந்த வாக்குறுதி, உலக பொருளாதார மீட்சிக்கு நம்பிக்கையைத் தந்து, உலகின் பெரிய நாட்டின் பொறுப்புக்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.