அமெரிக்க அர்ரசியல்வாதிகளின் கோட்பாட்டில் பயனில்லை
2020-12-21 21:10:09

கடந்த ஒரு வாரத்தில், கலிஃபோர்னியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக அதிகரித்து, மருத்துவச் சிகிச்சை ஆற்றலுக்கு அளவுக்கு மீறிய நெருக்கடியை கொடுத்துள்ளது என்று அமெரிக்காவின் சின்.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

கலிஃபோர்னியா மட்டுமல்லாமல் அமெரிக்கா முழுவதும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 7 நாட்களில், நாளுக்கு 2.1 இலட்சம் பேர் இவ்வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, இவர்களில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்று இச்செய்தி 19ஆம் நாள் கூறியது.

தற்போது, அமெரிக்காவின் தலைவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்தி அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று அறிவித்தனர். ஆனால், உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், தடுப்பூசி இருந்த போதிலும், மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

இதனிடையில் அமெரிக்காவின் தலைவர்கள் கரோனா வைரஸ் தடுப்பில் இன்னும் ஏதும் செய்யவில்லை. அண்மையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பாம்பியோ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தில் 900 பேர் கூட்டத்தை நடத்தும் முன்பு, கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தியவர் ஒருவருடன் தொடர்பு கொண்டதால், தனிமைபடுத்தப்பட்டார்.

உள்நாட்டில் வைரஸ் தடுப்புப் பணியில் பயன் கிடைக்காத நிலையில் அமெரிக்கா, வெளிநாடுகளின் விஷயங்களில் தலையிட்டு வருகிறது. அமெரிக்க அரசியல்வாதிகளின் “அரசியல் முதன்மை” என்ற கோட்பாடு மனித நேயத்திற்குப் புறம்பானது என்பது உலகிற்கு மேலும் தெரிந்தது.