உலகப் போக்குவரத்து பொதுச் சமூகத்தை உருவாக்குவதில் சீனாவின் பொறுப்புணர்வு
2020-12-23 20:17:29

அண்மையில் பாகிஸ்தானின் சுக்கூரிலிருந்து முல்தானுக்கான உயர்வேக நெடுஞ்சாலை அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் மிகப் பெரிய போக்குவரத்து அடிப்படை வசதித் திட்டப்பணியாகும். சீனத் தொழில் நிறுவனத்தால் கட்டியமைத்த இத்திட்டப்பணி, இரு இடங்களுக்கிடையிலான போக்குவரத்து 11 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

அதோடு, தொடர்புடைய நாடுகளின் கூட்டு முயற்சியுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு முக்கியப் பணிகளின்படி சீனா முன்வைத்த ஒத்துழைப்புக் கோட்பாட்டு அடிப்படையாக உருவாக்கப்பட்டது. சீனத் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு கட்டியமைக்கப்பட்ட மொம்பாசா-நைரோபி இருப்புப்பாதை, சீன-ஐரோப்பிய இருப்புப் பாதை உள்ளிட்ட திட்டப்பணிகள், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் தத்தமது மேம்பாடுகளை வெளிகொணர்ந்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்க உதவி செய்துள்ளன.

சீனா எப்போதும் சர்வதேச பொறுப்பு மற்றும் கடமைகளுக்கு உணர்வுப்பூர்வமாக ஏற்று, போக்குவரத்துத் துறையில் மேலதிகமான நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலக வறுமை ஒழிப்பு, மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் மேலாண்மை, பொருளாதார வளர்ச்சி முதலிய துறைகளில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று 22ஆம் நாள் வெளியிடப்பட்ட “சீனப் போக்குவரத்தின் தொடரவல்ல வளர்ச்சி” எனும் வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.