“சொந்த நலனுக்காக சீன தொழில் நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்”
2020-12-24 19:11:03

அமெரிக்காவின் ஜிப்சன் துன் மற்றும் க்ருட்சர் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, நடப்பு அமெரிக்க அரசு 2017ஆம் ஆண்டு பதவி ஏற்ற பின், 3900க்கும் மேலான தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகளின் தடை நடவடிக்கைகள் உள்நாட்டு நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா பல்வகை சாக்குப்போக்குகளைக் கூறி, நூற்றுக்கும் மேலான சீன தொழில் நிறுவனங்கள் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டு, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஹுவா வெய் தொழில் நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கையை கூறலாம். இத்தடை நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவின் ஒரு தொழில் நிறுவனம் 10 நாட்களுக்குள் 20 கோடி அமெரிக்கா டாலர் இழப்பை சந்தித்துள்ளது.

குறிப்பாக, தற்போது கரோனா வைரஸ் பரவல் நிலையில், அமெரிக்க அரசியல்வாதிகள் சொந்த நலனுக்காக, சீனாவின் தொழில் நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகிறது. இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை நிறுத்த முயற்சிப்பதன் மூலம், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மேலும் கடினமான நிலையில் சிக்கி, உள்நாட்டு மக்களுக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும்.