தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளை வாங்கி சேமிக்கும் மேலை நாடுகள்
2020-12-25 19:05:28

இப்போது உலக கரோனா தடுப்பூசிகளின் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணி முன்னேறி வருகின்றது. பல நாடுகள், மக்களுக்குத் தடுப்பூசிகளைப் போட பெருமளவில் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சமத்துவமாக தடுப்பூசிகளை வினியோகிப்பதில் சில மேலை நாடுகளின் அரசியலாளர்கள் கவனம் செலுத்தவில்லை.

கரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளின் அனுமதிகளைப் பெற்ற பிறகு, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய வளர்ந்த நாடுகள் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளை வாங்கி சேமிக்கும் என்று அமெரிக்க தேசிய வானொலி நிறுவனம் செய்தியில் வெளியிடப்பட்டது.

கரோனா வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலைமையில், சில வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை சேமிக்கும் நடவடிக்கை, கரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் நடவடிக்கைக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.