மக்களின் உயிர் மற்றும் வளர்ச்சி உரிமைகளைப் பேணிகாப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு
2020-12-26 15:41:33

உலக அளவில் புதிய ரக கரோனா வைரஸால் 7 கோடியே 80 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், கரோனா வைரஸ் மனித சமூகத்துக்கு இவ்வளவு பெரிய வேதனையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது.

சீனாவில் வூ ஹான் நகரம் திட்டவட்டமாக மூடப்பட்ட பிறகு, 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து வூ ஹாங் நகரத்துக்குச் சென்று உதவியளித்தனர். தவிரவும், பல்வேறு இடங்களிலும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சீன வேகம், மக்களின் உயிரைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மக்களின் உயிர் மற்றும் வளர்ச்சி உரிமைகளைப் பேணிகாப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு

அதே வேளையில், மாபெரும் வளர்ச்சி அறைகூவல்களை எதிர்கொண்ட போதிலும், 2020 ஆண்டுக்குள் முழுமையான வறுமை ஒழிப்பு என்ற வாக்குறுதியைச் சீனா திட்டத்திற்கிணங்க நிறைவேற்றியுள்ளது.

மக்களின் உயிர் மற்றும் வளர்ச்சி உரிமைகளை உறுதியாகப் பேணிகாப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசியல் அமைப்பு முறையின் மிக தெளிவான சிறப்பு என்பதை 2020ஆம் ஆண்டில், உண்மை சம்பவங்களின் மூலம், சர்வதேச பார்வையாளர்கள் இன்னும் ஆழமாக அறிந்து கொண்டுள்ளனர்.