உலகப் பொருளாதார மீட்சிக்குச் சீனாவின் பங்கு இன்றியமையானது
2020-12-27 17:17:06

கரோனா பரவலின் பாதிப்பின் பின்னணியில், இவ்வாண்டின் முதல் 11 திங்களில் சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 1.8 விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் மிக உயர் பதிவாகியுள்ளது. பன்னாட்டுத் தொழிற்துறைச் சங்கிலியிலா ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் சீனா, நோய் பாதிப்பைப் பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தியதன் அடிப்படையில் உற்பத்தியை மீட்பதில் முன்னிலை வகித்தது. அத்துடன் உலகத் தொழிற்துறைச் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியின் நிதானத்தை உறுதியாகப் பேணிகாத்துள்ளது.

சீனத் தொழிற்சாலைகளில் இயங்திரங்கள் இயக்கப்பட்டதால், உலகத் தொழிற்துறை சங்கிலி உறுதி செய்யப்பட்டது என்ற பொதுவான ஒரு கருத்து வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடையே நிலவுகிறது.

பி.எம்.டபிள்யூ, டைம்லர், சீமென்ஸ், டொயோட்டா, எல்ஜி உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவிலுள்ள அவற்றின் முதலீட்டு அளவை விரிவாக்கியதுடன், 2020ஆம் ஆண்டின் முதல் 11 திங்களில் சீனாவில் உண்மையாகப் பயன்படுத்திய வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 6.3 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விமர்சனத்தில் பிரான்ஸின் லெஸ் ஏகோஸ் செய்திதாள் கூறுகையில், சிக்கலான சர்வதேசச் சூழ்நிலையில், சீனா தனது வெளிநாட்டுத் திறப்பை மேலும் தரமாக விரிவாக்குவது, உலகச் சந்தைக்குப் பயன் தர முடியும் என்று கருத்து தெரிவித்தது.