அறிவியல் தொழில் நுட்ப புத்தாகத்தை கொண்டு உலகிற்கு பயன் தர சீனா முயற்சி
2020-12-28 19:01:59

கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவின் முழு சமூகத்திலும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொகை, ஒரு இலட்சத்து 42ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2இலட்சத்து 21ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பங்கு, 55.3விழுக்காட்டிலிருந்து 59.5விழுக்காடாக உயர்ந்த்தது. உலகளவில் புத்தாக்கக் குறியீட்டு எண் வரிசையில், சீனா 14ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தில் எண்ணிக்கையிலும் தரத்திலும் சீனா உயர்ந்து வருவது பல தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாண்டின் அக்டபோர் இறுதியில் வெளியியப்பட்ட சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், புத்தாகத்தை சீனாவின் நவீனமயமாக்கமாகக் கட்டுமானத்தின் மையமாக வைக்கப்பட்டது.

மேலும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு டிசம்பரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2019ஆம் ஆண்டு சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமைப் பணியகம் ஏற்றுக்கொண்ட அறிவுசார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14இலட்சத்தை எட்டியது. இதில் உலக அளவில் சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

புதிய வளர்ச்சி கட்டத்தில் நுழையவுள்ள சீனா, அறிவியல் தொழில் நுட்ப புத்தாகத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உலகம் வெகுவிரைவில் பாதிப்பிலிருந்து விடுவிப்படுவதற்குத் துணைபுரியும்.