வறுமை ஒழிப்பில் சீனாவின் வெற்றி
2020-12-29 17:35:49

2020ஆம் ஆண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பரவலைச் சீனா சமாளித்து, திட்டமிட்டபடி கொடிய வறுமை மற்றும் பிராந்திய ஒட்டுமொத்த வறுமையை ஒழித்துள்ளது. உலக வறுமைக் குறைப்பில் சீனாவின் பங்கு 70 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

வறுமை ஒழிப்பு என்பது உலகளாவிய பிரச்சினை. இதனைத் தீர்க்கும் வகையில், தலைமுறை தலைமுறையாக பெரும் முயற்சிகளைச் சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

வறுமை ஒழிப்பில் சீனாவின் வெற்றி_fororder_rBABCV_q09mAP8IXAAAAAAAAAAA041.900x620

ஐ.நா.விலுள்ள 17 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளில் முதலிடத்திலுள்ள "வறுமை ஒழிப்பு" இலக்கு நிறைவேற்றப்பட முடியும் என்று சீனாவின் வெற்றி சர்வதேசச் சமூகத்துக்கு முன் உதாரணமாக உள்ளது என்று மலேசியாவின் தி ஸ்டார் செய்தித் தாளில் தெரிவிக்கப்பட்டது.  

பல ஆண்டுகளாக, வறுமையிலிருந்து விடுபடுவதை முன்னேற்றுவதுடன், பரந்த வளரும் நாடுகளுக்கும் ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை நனவாக்கவும் சீனா இயன்ற அளவில் உதவியளித்து வருகின்றது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் 76 இலட்சம் மக்கள் தீவிர வறுமையிலிருந்து விடுபடவும், 3 கோடியே 20 இலட்சம் மக்கள் மிதமான வறுமையிலிருந்து விடுபடவும் சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.