காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவின் முயற்சி
2020-12-30 18:34:37

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில், உயர் குறிக்கோள் கொண்ட சீனா நடைமுறை நடவடிக்கை மூலம் செயல்பட்டு வருகின்றது. கடந்த 5ஆண்டுகளில், சீனாவின் உயிரினச் சூழலின் தரம் மிக பெரிய அளவில் மேம்பாடு அடைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இட்சியத்தில் சிறந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. திட்டப்படி 2020ஆம் ஆண்டில் கரி வெளியேற்ற அளவைக் குறைக்க வேண்டிய இலக்கு, முன்னதாகவே 2019ஆம் ஆண்டில் நனவாக்கப்பட்டது.

இவ்வாண்டின் டிசம்பர் 12ஆம் நாள் நடைபெற்ற ஐ.நாவின் காலநிலை உச்சி மாநாட்டில், எதிர்காலத்தில் உலகளவில் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மூன்று ஆலோசனைகளை முன்வைத்தார். சீனாவின் ஆலோசனைகளும் நடவடிக்கைகளும், தலைமைப் பங்காற்றும் என்று சர்வதேச சமூகம் பொதுவாகக் கருதுப்படுகின்றது.

தவிர, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு, உலகளாவிய கூட்டு செயல் இன்றியமையானது என்று ஐ.நா.தலைமைச் செயலாளர் குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்தார்.