சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை
2020-12-31 17:40:22

ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்க்கெல், பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான், ஐரோப்பிய பேரவைத் தலைவர் மிஷெல், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வான் டெலேன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 30ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் காணொலி வழியில் சந்திப்பு நடத்தினார். இதில் சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை திட்டப்படி நிறைவடைந்ததாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.

சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ஒன்றுக்கு ஒன்றிலான முதலீட்டுக்கும் மேலும் பெரிய சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்குவதற்கும் சிறந்த வணிகச் சூழல், அமைப்பு முறை உத்தரவாதம், ஒத்துழைப்பு எதிர்காலம் ஆகியவற்றை வழங்கும்.

இது, கரோனா வைரஸ் பரவலைச் சமாளித்து, உலகப் பொருளாதார மீட்சியைப் பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது. மேலும், இதன் மூலம் பொருளாதார உலகமயமாக்க மற்றும் தாராள  வர்த்தகத்தில் சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கை வலுப்படுத்தப்பட உள்ளது என்று ஷிச்சின்பிங் இச்சந்திப்பில் தெரிவித்தார்.