கட்டான காலத்தில் சீனாவின் பொறுப்பு
2020-12-31 17:13:52

2020ஆம் ஆண்டு ஓர் அசாதாரமான ஆண்டாகும். கரோனா தொற்று பரவி வரும் சூழலில், அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் நோய் பரவலை அரசியலாக்கி, ஒருதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலகளவில் நோய் தடுப்புப் பணிக்கும், பலதரப்புவாத ஒழுங்கிற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இக்கட்டான காலத்தில் சீனா எப்போதும் பெரிய நாட்டின் பொறுப்புடன், பலதரப்புவாதத்தில் உறுதியாக நின்று, நியாயம் மற்றும் தாராள வர்த்தகத்தைப் பேணிக்காத்து, வளர்ச்சிப் பாதையில் மென்மேலும் அதிகமான நாடுகளுக்கான உண்மை கூட்டாளியாகத் திகழ்ந்து வருகிறது.

சிக்கல்களைச் சமாளித்து வரும் இவ்வாண்டில், பல்வேறு நாடுகளுக்கு, வாய்ப்பாகவும் கூட்டாளியாகவும் சீனா உள்ளது. அச்சுறுத்தல் மற்றும் எதிரி அல்ல என்பதை, நடைமுறை செயல்களின் மூலம் சீனா காண்பித்துள்ளது.