உலகத்துடன் தைரியமாக முன்னேறுவோம்
2021-01-01 17:26:36

2021ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீன ஊடகக் குழுமம் மற்றும் இணையம் மூலம் புத்தாண்டுரையை வழங்கினார். கடந்த ஓராண்டை மீளாய்வு செய்த அவர், புதிய ஆண்டில் வளர்ச்சியின் மீதான எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். அனைவருக்கும் இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அசாதாரமான 2020ஆம் ஆண்டில், சீன மக்கள் வெளிப்படுத்திய வலுவான மனவுறுதியும் ஆற்றலும் உலகச் சமூகத்துக்கு நம்பிக்கையையும் நன்மையையும் வழங்கும்.

குறிப்பாக நோய் தடுப்புத் துறையில் சீனா பன்னாட்டு ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகிறது. மனித குலத்தின் பொது எதிர்காலம் என்ற கருத்தை இது  சிறப்பாக விளக்கம் எடுத்துரைத்தது. இது மட்டுமல்லாமல், கஷ்டமான நேரத்தில் உலக நாடுகளில் சீனா முதலாவது நாடாக பொருளாதார வளர்ச்சி பெற்றது உலகப் பொருளாதார மீட்சிக்கு வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் எதிர்கால வளர்ச்சியின் மீதான நம்பிக்கையும் வகுவாக உயர்ந்துள்ளது. சீனா உலகத்துடன் தைரியமாக முன்னேறி வருகிறது.