திபெத் பற்றிய அமெரிக்க அரசியல்வாதிகளின் சூழ்ச்சி தோல்வி அடைவது இயல்பே
2021-01-05 10:03:14

திபெத் விவகாரத்தை அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் அண்மையில் மீண்டும் மிகைப்படுத்தினர். குறிப்பாக, திபெத் மரபுவழி வாழும் புத்தர்களின் மறு பிறப்பு பற்றி, அவர்கள்மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.

சீனாவில் வாழும் புத்தர்கள் மறு பிறப்பு பற்றி, சில நூறு ஆண்டுகால வளர்ச்சி மூலம், கடுமையான மற்றும் கண்டிப்பான மத அமைப்புமுறையாக மாறியுள்ளது.

1959ஆம் ஆண்டில், திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலைப் பெற்றனர். அவர்கள் சமத்துவமாக நாட்டின் நிர்வாக அலுவல்களில் பங்கெடுத்து, தங்களது தேசிய இன மற்றும் பிரதேசத்தின் அலுவல்களில் தன்னாட்சி மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திரமில்லாத நிலையில் மற்றவர்களின் கொடுமைக்குள்ளாகும் பழங்காலத்துக்குத் திரும்ப யாரும் விரும்ப மாட்டார்.

செழுமை மற்றும் நிதான நிலையில் இருந்துவரும் திபெத், பிரிவினைவாத சக்திக்கு எந்த வாய்ப்பும் அளிக்காது.