சுய நலன்களுக்காக நாட்டை தவறாக வழிநடத்தும் அமெரிக்க அரசியல்வாதிகள்!
2021-01-06 21:11:59

கரோனா வைரஸால், 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு 3.5லட்சம் பேர் உயிரிழந்தனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒவ்வொரு 6 விநாடிகளிலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள்  அமெரிக்காவில் கரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டை இழந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. ஆனால், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பொய் தகவல்களைப் பரப்பி, பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக, அமெரிக்க பொது சுகாதார ஆணையத் தலைவர் ஜெரோம் எம். அடாம்ஸ் கூறுகையில்

தொற்று நோயின் காலத்தில் மிக கடினமான கடமைகளில் ஒன்று,   அரசியல் சூழலில் இருந்து அமெரிக்க மக்களுக்கு சரியான சுகாதார தகவல்களை அளிப்பது தான் என்று சுட்டிக்காட்டினார்.

தவறான தகவல்களின் பெரும் பரவல் என்பதே, முன்னேறிய மருத்துவத் தொழில் நுட்பங்களைக் கொண்ட அமெரிக்காவில் கரோனா வைரஸால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற தொற்று நோய் பரவலை எதிர்கொள்ளும் போது, அமெரிக்க அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் மாற்றம் எதும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வதந்திகளை உருவாக்கி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் அதிக ஆவலுடன் இருந்தனர். தனது சுய நலன்களுக்காக அவர்கள், முன்பு இல்லாத அளவில் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், 2021ஆம் புத்தாண்டு நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுட்டுரையில், தற்போதைய அமெரிக்கா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த்தை விட பாதுகாப்பாக உள்ளது என்று பதிவிட்டார். ஆனால் இதற்கு முந்தை ஒரு வாரத்தில், அமெரிக்காவில் ஒவ்வொரு 33 விநாடிகளிலும் ஒருவர் கரோனா நோயினால் உயிரிழந்தார். அமெரிக்க் அரசியல்வாதிகளின் பார்வையில் உள்ள மேலும் பாதுகாப்பான அமெரிக்கா இதுவா?  இத்தகைய பொய் கூற்று, தன்னைத் தானே ஏமாற்றுவதாக மட்டும் உள்ளது.