நியூயார்க் பங்குச் சந்தையின் உறுதியற்ற நிலைப்பாடு
2021-01-06 09:21:21

சீன மொபைல், சீன டெலிகாம், சீன யூனிகாம் ஆகிய மூன்று தொழில் நிறுவனங்களும், நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று நியூயார்க் பங்குச் சந்தை 2020ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பாக இச்சந்தை 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இத்தீர்மானம் நீக்கப்பட்டுள்ளது.

விதிக்கு மதிப்பு அளிக்க வேண்டியது சர்வதேச நாணய மையமான அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையாகும். அவ்வாறன்றி உறுதியும் நிதானமுமற்ற அமெரிக்காவின் விதியையும் வரையறையையும் அமெரிக்க நிதிச்சந்தைக் கொண்டிருப்பதால் அதன் மீதான உலகத்தின் நம்பிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.