அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்தேறிய வன்முறைக் காட்சி
2021-01-07 19:27:19

அமெரிக்க பொதுத் தேர்தல் நடைமுறையின்படி, ஜனவரி 6ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகள் ஒன்றாக சேர்ந்து கூட்டம் நடத்தி, தேர்தல் முடிவுக்கு அங்கீகாரம் அளிக்க இருந்தன. ஆனால், இத்தேதியில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பெருமளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டனர். இது வரை, இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் விளக்கு கோபுரம் என தன்னை தானே அழைக்கும் அமெரிக்காவில், இந்த வன்முறைச்செயல் நிகழ்ந்தது. அது, உலகிற்கு வியப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கடந்த சில ஆண்டுகளில், மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா  ஆகியவற்றில், அமெரிக்கா,  ஜனநாயம் என்ற பெயரில் கூறப்படும் அரபு வசந்தம் எனும் நிகழ்வுகளை நடத்தியது. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வண்ண புரட்சியை அமெரிக்கா நிகழ்த்தியது. இப்பிரதேசங்களில் உள்ளூர் காவல்துறையினர்கள், சட்ட ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுத்தால், அதை ஜனநாயகத்தின் அச்சுறுத்தல் என்று அமெரிக்கா விமர்சித்தது. தற்போது, அதே சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்ததையடுத்து, அமெரிக்க காவல்துறையினர்  ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்துள்ளனர். ஜனநாயகம் தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் நேரில் காண்கின்றோம். அமெரிக்க அரசியல்வாதிகளால் கூறப்படும் “அழகிய காட்சி”தற்போது வன்முறைக் காட்சியாக மாறியுள்ளது. இத்தகைய நிலைமையை இவர்கள் எதிர்கொள்வது எப்படி? இவர்கள் முதலில் தனது விடயங்களைக் கையாள வேண்டியது அவசியமானது. இவர்கள் எப்போதும் அமெரிக்க ஜனநாயகத்தைப் பரப்ப வேண்டாம்.