சீன தொழில் நிறுவனத்தை தடுப்பதில் அமெரிக்காவின் மற்றொரு பைத்தியக்காரத்தனமான செயல்
2021-01-08 19:36:37

தேசிய பாதுகாப்பை காரணமாக கொண்டு, வீசாட், அலிபெய் உள்ளிட்ட சீனாவின் 8 கைப்பேசி செயலிகளுக்கு தடை விதிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் சமீபத்தில் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

அமெரிக்க அரசியல்வாதி, பதவிக் காலம் முடிவுக்கு வரும் முன்பு, நாட்டின் சக்தியைப் பயன்படுத்தி சீன தொழில் நிறுவனத்தை தடுப்பதில் மற்றொரு பைத்தியக்காரத்தனமான செயல் அதுவாகும்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் வரும் ஜனவரி 20ஆம் நாள் பதவியேற்க உள்ளது. அதேவேளையில், டிரம்ப் பிறப்பித்த இந்த உத்தரவு, கையெழுத்தான 45 நாட்களுக்கு பிறகு நடைமுறையில் செயல்படும். எனவே, இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்,  தேசிய பாதுகாப்பு அமைச்சகம்,  நிதி அமைச்சகத்துடன் இணைந்து இந்த முடிவு குறித்து விவாதித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுப்பு என்ற பெயரில், காரணமின்றி சீன தொழில் நிறுவனங்களைத் தடை செய்வதில் இருந்து, சீனாவுக்கு எதிராக அமெரிக்க சிலரின் கடும் தவறான எண்ணம் எழுந்துள்ளது.

மறுபுறம், ஏபல், ஃபோர்ட், வால்மார்டு உள்ளிட்ட அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் வெள்ளைமாளிகையிடம் பேசுகையில், வீசாட் செயலிக்கு தடை செய்தால்,  சீனச் சந்தையில், இந்த நிறுவனங்களின் போடித்திறன் குறையும். எனவே, அமெரிக்க அரசியல்வாதிகளின் பைத்தியக்காரத்தனமான செயலுக்கு ஆதரவு கிடைக்காது என தெரிவித்துள்ளது.