ஆப்பிரிக்காவின் உண்மையான நண்பர் சீனா
2021-01-11 19:19:21

சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், சீனா-ஆப்பிரிக்க ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் சீனாவின் மனவுறுதி என்றும் மாறாது. கடந்த 31 ஆண்டுகளாக, புத்தாண்டின் தொடக்கத்தில்  ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் சீனத் தூதாண்மை பாரம்பரியம் மாறவில்லை. தொற்று நோய் பரவல் பாதிப்பில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 5 ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதல் உண்மையான நட்பை இது வெளிப்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டில், சீன-ஆப்பிரிக்க நட்பு வாய்ந்த ஆதரவு, வலகளவில் ஒற்றுமையுடன் நோய் தடுப்புக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களுடன் பல முறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனாவும் ஆப்பிரிக்காவும் தொற்று நோயைக் கூட்டாக தடுக்கும் சிறப்பு உச்சி மாநாட்டை நடத்த முன்மொழிந்தார். சீனா, பல்வேறு வழிகளில் ஆப்பிரிக்காவில் உள்ள 53 நாடுகளுக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் உதவிகள் வழங்கி, தொற்றுநோய் தடுப்புப் பணிகளுக்கு வலுவாக ஆதரவளித்து, ஆப்பிரிக்காவின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

10ஆம் நாள், செசல்ஸ் அரசுத் தலைவர் தலைமையிலான செசல்ஸ் நாட்டு மக்கள் சீனாவின் சைனோஃபா தயாரித்துள்ள புதிய கரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

அத்துடன், ஆப்பிரிக்க பொருளாதார மீட்சிக்கு சீனா ஆதரவு அளித்து வருகின்றது. இது வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தில் ஆப்பிரிக்காவின் 46 நாடுகள் சேர்ந்துள்ளன. ஆப்பிரிக்காவின் அமைதியான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வமாக பங்காற்றும் விதம், ஆப்பிரிக்க நாடுகளின் விருப்பத்துக்கு முழுமையாக மதிப்பளிக்கும் அடிப்படையில் ஆப்பிரிக்காவுடன் 3 தரப்புகள் அல்லது பல தரப்புகள் ஒத்துழைப்பு மேற்கொள்ள சீனா விரும்புகிறது.