இனவெறிக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமெரிக்கா!
2021-01-13 20:04:11

இனவெறிக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமெரிக்கா!_fororder_微信图片_20210113195651

அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், சின்ஜியாங் தொடர்புடைய வதந்திகளைப் பரப்பி, சீனாவின் மீது பழி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அமெரிக்காவின் நடப்பு அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர்கள் சின்ஜியாங் தொடர்புடைய வரைவுத் தீர்மானத்தை முன்வைத்து, கூறப்படும் “இன ஒழிப்பு” என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். இதற்கு சீன அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இது பச்சைப்பொய் ஆகும். இன ஒழிப்பு இருக்கா இல்லையா என்பதை மக்கள் தொகையால் நிரூபிக்க முடியும். அண்மையில், சின்ஜியாங் உள்ளூர் அதிகாரி ஒருவர் 30க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், சின்ஜியாங்கிற்கான பயன்தரும் நிர்வாகக் கொள்கையின் காரணமாக, 2010 முதல் 2018ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங் உய்கூர் இன மக்கள் தொகை, ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ஒரு கோடியே 27 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு அளவு, ஹன் இன மக்கள் தொகையின் அதிகரிப்பு அளவை விட மேலும் அதிகம். இன ஒழிப்பு இருந்தால், உய்கூர் இன மக்கள் தொகை எப்படி அதிகரிக்கும்?

ஆனால், அமெரிக்காவில் இன ஒழிப்பு என்ற நிலைமை உண்மையிலே உள்ளது. இனவெறி, அமெரிக்காவில் முக்கிய மற்றும் நீண்டகால அடையாளமாகும் என்று  அமெரிக்க அறிஞர் டெரிக் பெல் முன்பு தெரிவித்திருந்தார். தற்போது, இந்தக் கூற்று, வரலாறு மற்றும் உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.