அமெரிக்க நலன்களைக் கட்டுப்படுத்தும் பணக்காரர்கள்
2021-01-14 09:52:38

அமெரிக்காவின் சுதந்திரமான செய்தி ஊடகங்கள், டொனால்டு டிரம்பைக் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், அமெரிக்காவில் இத்தகைய பெரிய பிரிவினை ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணம்,  டிரம்ப்  அல்ல. தன்னை தானே அழைக்கும் ஜனநாயக நாடு என்ற கூற்றுக்கு மாறாக, அமெரிக்கா, பணக்காரர்கள் நாடாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நலன்கள்,  அதன் மக்கள் தொகையில் மிக உயர் மட்டத்திலுள்ள  1 விழுக்காட்டினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன  இதனால், உள்நாட்டில் பிற மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. இது, அடிப்படைக் காரணமாகும் என்று சிங்கப்பூரில் புகழ்பெற்ற அறிஞர் மஹ்புபனி சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, நன்மையும் தீமையையும் மதிப்பீடு செய்து, மேலும் டிரம்பை விசாரணை செய்ய முடிவெடுக்க வாய்ப்புள்ளது. இதனால், டிரம்பின் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்ப்பும் மனநிறைவின்மையும் ஏற்படுவது உறுதி. பின்னர், அமெரிக்காவின் நிலைமையைக் கணிக்க முடியாது என்று மஹ்புபனி குறிப்பிட்டார்.