கரோனா வைரஸ் தடுப்புக்கான சீனாவின் அன்னிய வர்த்தகத்தின் பங்கு
2021-01-14 21:10:51

கரோனா வைரஸ் தடுப்புக்கான சீனாவின் அன்னிய வர்த்தகத்தின் பங்கு_fororder_微信图片_20210114210939

2020ஆம் ஆண்டு சீனாவின் அன்னிய வர்த்தகப் புள்ளிவிவரங்களை சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்டது. இது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், அன்னிய வர்த்தகத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனை, உலகத் தொழில் மற்றும் வினியோகச் சங்கிலியின் மீட்சியைப் பெரிதும் முன்னேற்றியுள்ளது.

2020ஆம் ஆண்டு, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைச் சீனா பயன்தரும் முறையில் மேற்கொண்டதால், சீனாவின் அன்னிய வர்த்தகம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டு சரக்கு வர்த்தகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 32 லட்சத்து 16 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது 2019ம் ஆண்டில் இருந்ததை விட 1.9 விழுக்காடு அதிகம்.

மேலும், 2020ஆம் ஆண்டு, நெசவுப் பொருள், மருத்துவ இயந்திரம், மருந்து ஆகிய பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 31 விழுக்காடு அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்புக்கான சீனாவின் பங்கு இதுவாகும்.

இறக்குமதியைப் பார்த்தால், சீனாவின் மிகப் பெரிய சந்தை அளவு உலகிற்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் கச்சா எண்ணெய், உலோகத்தாது ஆகிய மூலவளப் பொருட்களின் இறக்குமதி முறையே 7.3, 7 விழுக்காடு அதிகரித்துள்ளன. தானியம், இறைச்சி ஆகிய வேளாண் பொருட்களின் இறக்குமதி முறையே 28, 60.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. கடந்த டிசம்பரில் சீனப் பொருளாதாரத்தின் வலுவான மீட்சி, வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான தேவையைத் தூண்டியதுடன், முந்தைய ஆய்வின் அடிப்படையிலான மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அசாதாரண 2020ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் நிதானமான வளர்ச்சி மற்றும் தர உயர்வை நனவாக்கியுள்ளது. சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை, சீன அரசின் துல்லியமான நடவடிக்கை மற்றும் பொது மக்களின் முயற்சிகள் ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

2020ஆம் ஆண்டில் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய மூன்று முக்கியக் கூட்டாளிகளுடன் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை முறையே 7, 5.3, 8.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகலவில் முதலாவது சரக்கு வர்த்தக நாடு என்ற தகுநிலையை சீனா வலுப்படுத்தி வருவதோடு, உலக வர்த்தகக் கூட்டாளிகளுடன் வளர்ச்சியின் ஈவுத்தொகையை அதிகமாக பகிர்ந்து கொண்டு வருக்கிறது.

நோய்த் தடுப்புப் போக்கிலும் உலகத் தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலி மீட்சிப் போக்கிலும் சீனா தொடர்ந்து பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை ஆதரித்து, பொருளாதார மீட்சிக்கான ஆற்றலை முழு உலகிற்கும் வழங்கி வருகிறது.