© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
புத்தாண்டின் துவக்கத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் ஆதரவரானர்கள் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, வன்முறையின் வழியாக பொது தேர்தலின் முடிவை மாற்ற முயன்றனர். பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை ஜனவரி 13ஆம் நாள் கலகத்தைத் தூண்டினார் என்ற காரணத்துக்காக, டொனல்ட் டிரம்புக்கு எதிராக 2வது முறையாக பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இப்பின்னணியில், அமெரிக்கச் சமூகத்தில் ஆழ்ந்த முரண்பாடுகள் காணப்படுவது தெரிகிறது. அமெரிக்காவின் 2 கட்சிகள், நாடு மற்றும் பொது மக்களின் நலன்களை விட, தங்களது சொந்த நலன்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளிப்பதால், அவற்றுக்கிடையிலான சர்ச்சை தீவிரமாகி வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், இரு கட்சிகளும் ஒன்றின் மீது ஒன்று குற்றஞ்சாட்டின. கட்சிகளுக்கிடையிலான சர்ச்சை காரணமாக, கரோனா தடுப்புப் பொருட்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் சமநிலையில் வினியோகிக்கப்பட முடியவில்லை. ஒருங்கிணைப்பான கொள்கை இல்லாத நிலையில், இதுவரை அமெரிக்காவில் 2 கோடியே 30 லட்சத்துக்கு மேலானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நிலவும் அரசியல் பிரிவினை, 2021ஆம் ஆண்டு உலகத்தின் 10 பெரிய இடர்ப்பாட்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்தது என்று அமெரிக்க அரசியல் இடர்ப்பாட்டுக்கான ஆலோசனை நிறுவனமான யூரேசியா குழுமம் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.