அமெரிக்க அரசியல் வீழ்ச்சியைத் தீவிரமாக்கிய பொது நலக் குழுக்கள்
2021-01-16 19:50:44

நான்கு ஆண்டுகளுக்கு முன், குடியரசு கட்சியின் வேட்பாளராக அரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் போட்டியிட்ட போது அமெரிக்க அரசியலில் நிலவிய ஊழலைத் தடுப்போம் என்று அமெரிக்க தலைவர் கூறியிருந்தார். நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. அமெரிக்க அரசியல்வாதிகள் ஊழலற்ற செயல்படுவதற்குப் பதிலாக, அரசியலில் ஊழல் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்பதை மக்கள் காண முடியும். பொது நலன்களைக் கொண்டுள்ளதால் உருவாகிய குழு, அரசியல் குழுவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளதும், பண அரசியலினால் ஊழல் ஏற்பட்டுள்ளதும், அமெரிக்க அரசியல் வீழ்ச்சியைத் தீவிரமாக்கியுள்ளன.

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில், பொது நலன் கொண்டுள்ள குழுவினர், அமெரிக்க அரசியலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு, நேரடியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பண அரசியலை இக்குழுவினர் தீவிரமாக்கியுள்ளனர். அரசு தலைவர் தேர்தலில் பொது நலன் கொண்டுள்ள குழுவினர், விருப்பத்தின்படி நிதியைத் திரட்டி, வினியோகித்து, பல்வேறு நிலை தேர்தல் முடிவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர்.

பொது நலன்களைக் கொண்டுள்ள குழுவினரின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க தலைவர்கள், ஆட்சி புரிந்த பிறகு, இக்குழுவினர்களுக்கு சேவை புரிவது இயல்பே. அது மட்டுமல்ல, நடப்பு அமெரிக்க அரசு நியமித்த ராணுவ பணியாளர்களுடன், ஆயுதங்களை விற்கும் வணிகர்களுடன் நெருங்கிய உறவை நிலைநிறுத்தியுள்ளனர்.

அமெரிக்க அரசியல், பணத்தால் சீர்கெட்டு, அமைப்பு முறை ரீதியான ஊழலாக மாறியுள்ளது என்பதை காணலாம்.