அமெரிக்க நலனைப் பாதிக்கும் அமெரிக்க அரசியலாளர்கள்
2021-01-16 16:02:53

அமெரிக்காவின் எல்லா நுழைவாயில்கள், சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட பருத்தி மற்றும் தக்காளி பொருட்களைத் தடுக்கும் என்று 13ஆம் நாள் அமெரிக்க சுங்க துறை மற்றும் எல்லை பாதுகாப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வானொலிச் செய்திகளின் படி, அமெரிக்க சுங்க துறை வெளியிட்ட 13 தடுப்பு கட்டளைகளில், 8 கட்டளைகள் சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துடன் தொடர்பு உள்ளன.

பருத்தி மற்றும் தக்காளி தயாரிப்பு துறைகள், சீனாவின் சிங் ஜியாங் வெய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தூணாக இருப்பதோடு, உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மனித உரிமை என்ற பெயரில் அவதூறு கூறி வருகின்ற அமெரிக்க அரசியலாளர்கள், சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச மக்களின் வேலை வாய்ப்புகளை ஒழிக்க முயன்றனர்.

உண்மையில், கடந்த சில ஆண்டுகளில் சீன அரசு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் கொள்கைகளை வெளியிட்டது. இதன் மூலம் சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறைய நலனைப் பெற்றது.

நிர்வாக நடவடிக்கையின் மூலம், சிங் ஜியாங்கின் பொருட்களைத் தடுக்கும் அமெரிக்க அரசியலாளர்களால், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.