அதிக கட்டணம் வசூலிக்கும் அமெரிக்க மருத்துவ சேவை!
2021-01-17 16:54:12

மைக்கேல் என்ற அமெரிக்கர் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் 62 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் 11 இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்க மருத்துவ அமைப்பு முறை, முதலாளித்துவ முறைக்கு சேவை புரியும் சாராம்சம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அனைத்து மக்களுக்கு சேவை புரியும் மருத்துவ அமைப்பை உருவாக்கியுள்ளன. வணிக மருத்துவ காப்புறுதியும் அரசு மருத்துவ காப்புறுதியும் இணைந்த மருத்துவ அமைப்பை அமெரிக்கா ஏற்படுத்தியது. இந்நிலையில் 9 விழுக்காடான அமெரிக்க மக்கள் மருத்துவ அமைப்பு முறையில் சேர்க்கப்படவில்லை.

அமெரிக்க தேசிய புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2019ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சிகிச்சை செலவு, 3 இலட்சத்து 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இத்தொகை அமெரிக்காவின் உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 18 விழுக்காடு வகித்துள்ளது. ஆனால, அமெரிக்கர்களின் சராசரியாக ஆயுள் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 25 உறுப்பு நாடுகளின் பதிவை விட குறைவு தான்.

அமெரிக்காவின் பொருளாதார அரசியல் மாறாமல் இருந்தால், அமெரிக்க மருத்துவ அமைப்பு முறை, அமெரிக்கர்கள் மற்றும் முழு நாட்டின் நலனைத் தொடர்ந்து பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.