உலகில் பொருளாதார அதிகரிக்கும் ஒரே ஒரு முக்கிய பொருளாதார நாடு சீனா
2021-01-18 16:29:30

2020ஆம் ஆண்டில் புதிய ரக கரோனா வைரஸ், உலக வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் சீனாவின் அன்னிய வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் சீனாவின் ஏற்றுமதி தொகை, வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சீனா, கடந்த ஆண்டில் உலகளவில் பொருளாதார வளர்ச்சி கண்ட ஒரே ஒரு முக்கிய பொருளாதார நாடாக சீனா திகழ்கின்றது என்று அமெரிக்காவின் வால்ஸ்ட்சீட் நாளேடு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சீன சுங்க துறை தலைமை பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சில மாதங்களில், வைரஸ் பரவல் சீனாவின் ஏற்றுமதியையும் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்த போதிலும், அதையடுத்து சீன பல்வேறு இடங்களிலுள்ள தொழிற்சாலைகள் மீண்டும் இயல்பாக இயங்க தொடங்கின. மருத்துவ பொருட்களையும், வீட்டில் வேலை செய்வதற்கு தேவையான கணினி ஆகிய பொருட்களையும், பல்வேறு நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்தது.