பொருளாதாரத்தில் வளர்ச்சி காணும் சீனா உலகின் மீட்சிக்கு உதவி செய்து வருகிறது
2021-01-18 20:51:15

சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ள சீனா உலகப் பொருளாதார மீட்சிக்கு உதவி செய்து வருகிறது என்று ப்ளும்பர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

மனிதகுலத்தின் பொதுச் சமூகத்தை உருவாக்கி, கூட்டு வெற்றி மற்றும் பகிர்வை நனவாக்குவது என்ற திட்டத்தை சீனா வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு, சீனாவின் சரக்குப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.9 விழுக்காடு அதிகம். 2020ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அன்னிய செலாவனியைப் பயன்படுத்தும் தொகை 2019ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 6.3 விழுக்காடு அதிகம். சீனா தனது உண்மையான செயல்களின் மூலம், வைரஸ் தடுப்புப் பொருட்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய தேவையான பொருட்களை உலகிற்கு வழங்குவது, உலக உற்பத்திச் சங்கிலியின் நிதான நிலை மற்றும் உலகப் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவது ஆகியவற்றுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.