அமெரிக்கச் சமூகத்தைச் சீர்குலைக்கும் இனவெறி
2021-01-19 12:47:48

அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு இனங்கள், வெவ்வேறான அனுபவங்களைப் பெற்றுள்ளன. செல்விந்தியர்களின் படுகொலை தொடங்கி ஆப்பிரிக்கர்களைக் கடத்தி வியாபாரம் செய்வது வரை, அமெரிக்க வரலாற்றில், இனவெறி அமெரிக்கா சுய நலன் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாகும். உண்மையில், கூறப்படும் அமெரிக்க "ஜனநாயகம்" என்பது சிறுப்பான்மையினர்களை மையப்படுத்தி நடக்கும் அரசியல் விளையாட்டாகும். இதனிடையே அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்களின் படி, புதிய கரோன வைரஸால் வெள்ளையர்களை விட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இறப்பு விகிதம் 2.8 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு, அமெரிக்க மக்கள் தொகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 12 முதல் 13  விழுக்காடாக மட்டுமே இருக்கின்றனர். ஆனால், காவற்துறையினரின் தாக்குதல்களினால் பலியானவர்களில் 40 விழுக்காட்டினர்  ஆப்பிரிக்க அமெரிக்கர்கர்கள் ஆவர். தவிர, வேலைவாய்ப்பு, ஊதியம், கடன் அளிப்புத் தொகை ஆகியவற்றிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பாகுபாட்டோடு நடத்தப்படுகின்றார்கள்.

உண்மையில் அமெரிக்க வரலாற்றில் இனவெறி இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. இன மோதல் மூண்ட பின், அமெரிக்க அரசு, அரசியல் முறை மூலம் அமெரிக்க ஜனநாயகத்தின் உள்ளார்ந்த நெருக்கடியை மூடிமறைத்து வருகின்றது. இதனால், எந்த நேரத்திலும் மக்களின் உணர்வைத் தீவிரமாக்கும் இனவெறி, அமெரிக்க சமூகத்தின் பிரிவினையை விரைவுப்படுத்தும்.