© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

அமெரிக்கத் தொழிலாளர் துறை வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 9ஆம் நாள் வரை, வேலை இழப்புக்கான மீட்புதவிக்கு விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 65 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனிடையில், அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட புதிய தகவலின்படி, 2020ஆம் ஆண்டு அக்டோபர் திங்களின் பாதி வரை, அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் செல்வம் 3 லட்சத்து 88 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, மார்ச் திங்களில் இருந்த மதிப்பை விட 93 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலர் அதிகமாகும்.
கரோனா வைரஸ் பரவி வரும் நிலைமையில், அமெரிக்காவில் ஏழை பணக்கார இடைவெளி மேலும் தெளிவாகக் காணப்பட்டுள்ளது.
பியூ ஆராய்ச்சி மையம் 2018ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வெளியிட்ட ஆய்வின்படி, 1970ஆம் ஆண்டு தொடங்கி, அமெரிக்காவில் ஏழை பணக்கார இடைவெளி தொடர்ச்சியாக அதிகமாகி வருகிறது. தனியார்மயமாக்கம், சந்தைமயமாக்கம், சுதந்திரமயமாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பணக்காரர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற கொள்கை அமைப்பு முறையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாகப் பிரிட்டன் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலதிக மீட்சியுதவித் திட்டங்களை அமெரிக்க அரசு வெளியிட்டாலும், ஏழை பணக்கார இடைவெளி அதிகரிக்கும் நிலைமையை மாற்ற முடியாது.