சீனாவில் புதிய வரலாற்றுப் பதிவை உருவாக்கிய வெளிநாட்டு முதலீடு
2021-01-21 15:07:00

சீன வணிக அமைக்கசம் 20ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டு சீனாவில் நடைமுறை பயன்பாட்டுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு 99ஆயிரத்து 998 கோடி யுவானாகும். இது, 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட, 6.2விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டுத் தொகை, உலகளவில் வகிக்கும் பங்கு மற்றும் அதிகரிக்கும் விகிதம் மூன்று குறியீடுகள் உயர்ந்துள்ளன. முதலீடு செய்ய விரும்பத்தக்க இடமாக சீனா ஈர்ப்பு மிக்கது என்பதை இது வெளிக்காட்டுகின்றது.

சீனாவின் சேவைத் துறையில் நடைமுறை பயன்பாட்டுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு 13.9 விழுக்காடு அதிகரித்து 77ஆயிரத்து 677கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த தொகை, மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 77.7விழுக்காடு ஆகும். மேலும், உயர் தொழில்நுட்பத் தொழில்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப சேவைத் துறையின் வெளிநாட்டு முதலீடுகள் முறையே 11.4 விழுக்காடும் 28.5விழுக்காடும்  அதிகரித்துள்ளன. சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் தொழில்களின் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதை இது வெளிக்காட்டியுள்ளது. அதோடு, இவ்வளர்ச்சிப்போக்கு சீனப் பொருளாதாரம் உயர் தரமான வளர்ச்சியை நோக்கி மாறிவருவதை மெய்ப்பித்துள்ளது.