சீன - அமெரிக்க உறவின் வளர்ச்சித் திசை
2021-01-22 11:34:26

அமெரிக்காவின் புதிய அரசுத் தலைவராக ஜனவரி 20-ஆம் நாள் ஜோ பைடன் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஜோ பைடனின் வருகையால், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளில்  குறிப்பிட்ட அளவிலான மாற்றங்கள் காணப்படும் என்று ஊடகங்கள் பொதுவாகக் கருத்து தெரிவித்துள்ளன. இதில், சீனாவுடனான கொள்கைகளை, தெளிவான சிந்தனையுடனும் நியானமான மற்றும் நடைமுறைக்கு ஏற்பவும் அமெரிக்க புதிய அரசு வகுக்குமா?  என்பதில் ஊடகங்கள் அதிகக் கவனம் செலுத்தியுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக,  சீன-அமெரிக்க உறவு மிகவும் சிக்கலான நிலையில் சிக்கியுள்ளது. இச்சூழலில், இரு நாட்டுறவை எவ்வாறு சீராக்கும் என்னும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டின் நவம்பர் திங்கள், அமெரிக்க அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்த போது, சீன மற்றும் அமெரிக்க உறவை சீராகவும் நிதானமாகவும் முன்னேற்றும் வகையில், இரு நாடுகளும் மோதல் மற்றும் எதிர் நிலை இல்லாமல், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய எழுச்சிகளைப் பின்பற்றி, ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, வேற்றுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். இது, சீன-அமெரிக்க உறவு தற்போதைய சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு தெளிவான திசையை வழிக்காட்டியுள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் ஒரே திசையை நோக்கி முன்னேறினால், அப்போக்கு  உலகிற்கு அதிகப் பயன்கள் கொண்டு வரும் என்பதும், இரு நாடுகளும் நேருக்கு நேர் எதிர்த்தால், அதனால் உலகளவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதும் கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.